சிதம்பரக் கல்லூரி நிறுவனர் தின, வருடாந்த பரிசளிப்பு விழா 11.11.2022 அன்று காலை 9.00 மணியளவில் பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் வே பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக சிதம்பரக் கல்லூரி பழைய மாணவியும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி வளர்மதி அம்பலவாணர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் யா/ புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரி உதவி அதிபர் திரு அம்பலவாணர் பகீரதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் ஆன்மீக அதிதியாக சோமாஸ்கந்த தண்டபாணிக தேசிகர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்ட விருந்தினர்கள் மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கினர், மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் நிறுவனர் தின உரையை ஒய்வுநிலை அதிபர் திரு பூதத்தம்பி சக்திவேல் அவர்கள் நிகழ்த்தினார்.