வலைப்பந்தாட்டத்தில் தொடர்ந்து சாதனைகளை நிலைநாட்டி வரும் வல்வை உதயசூரியன் வீராங்கனைகள்

0
930 views

வல்வை உதயசூரியன் கழகம் தமது 57ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடாத்தி வரும், வல்வை விளையாட்டு கழகத்திற்கு உட்பட்ட சகோதர கழகங்களுக்கிடையிலான பெரு விளையாட்டுக்களின் வரிசையில் பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டிகள், தீருவில் விளையாட்டு கழக மைதானத்தில் 17.08.2019 நேற்று மாலை நடைபெற்றது.

முதலாவது போட்டியில் சைனிங்ஸ், உதயசூரியன் அணிகள் மோதின. உதயசூரியன் அணி 12:5 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்றது.  ஆட்ட நாயகியாக உதயசூரியன் கழக வீராங்கனை தனுசா தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டாவது போட்டியில் றெயின்போ , தீருவில் அணிகள் மோதின. றெயின்போ அணி 8:3 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்றது.  ஆட்ட நாயகியாக றெயின்போ விளையாட்டுக் கழக வீராங்கனை நிசாந்தி தெரிவு செய்யப்பட்டார்.

அரையிறுதிப் போட்டியில் நேதாயி, உதயசூரியன் அணிகள் மோதின. உதயசூரியன் அணி 13:10 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்றது.  ஆட்ட நாயகியாக உதயசூரியன் கழக வீராங்கனை நதியா தெரிவு செய்யப்பட்டார்.

இறுதிப் போட்டியில் உதயசூரியன், றெயின்போ அணிகள் மோதின. உதயசூரியன் கழகம் 14:2 என்ற கோல்க்கணக்கில்  றெயின்போ விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி சம்பியனானது.  ஆட்ட நாயகியாக உதயசூரியன் கழக வீராங்கனை ரோகினி தெரிவு செய்யப்பட்டார்.

வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here