வல்வை விளையாட்டுக்கழகத்தின் 57 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்டு வரும் பெருவிளையாட்டுக்களில் ஒன்றாகிய கடல் விளையாட்டுக்களின் வரிசையில் இன்றைய தினம் நீச்சல் போட்டிகள் இடம்பெற்றன.
இதில் உதயசூரியன் கழக அங்கத்தவரான 62 வயதையுடைய T.பாலேஸ்வரன் அவர்கள் பல இளைஞர்களுடன் போட்டியிட்டு முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.










