கண்ணீர் அஞ்சலிகள் – முத்துக்குமார் அம்பிகை மகன் தங்கவேல்​

0
675 views

கண்ணீர் அஞ்சலிகள்

முத்துக்குமார் அம்பிகை மகன் தங்கவேல்​
வாள் கொண்டு கரை காத்த வல்வெட்டித்துறையம்பதியில்​
வயலுரான் பெயர் கொண்டு வாழ்ந்தண்ணா​
வல்வையரின்வாசம் பரப்ப பல்லாண்டு பணி செய்தாய்​
வல்வையரின் வரலாற்றை ஜம்பதாண்டு காலம்​
அழகாக வரைந்து வைத்தாய்​
குச்சத்தில் மாடு வளர்த்து புனிதம் கண்ட குடும்பமது​
அம்பாளின் காப்புடன் கைலாசம் சென்றவரே​
முப்பத்தெட்டு கோயில் கொண்ட வல்வையம்பதியில்​
நீங்கள் பாடிவைத்த பக்திப்பாடலகள் மனம் குளிரும்​
சிதம்பாராவின் சாரணியத்தில்; துடிப்பான சாரணியன் நீங்கள்​
சிதம்பரா மூன்று தடவைகள் அகில இலங்கையில் வென்று​
பெற்றிக்கேடயம் பெற்ற வரலாற்றுக் காலத்தவர்​
சிதம்பராவின் கால் கை பந்தாட்டங்களின் வெற்றிகள்​
 பெருமைகள் கொண்டது உங்களாலும்தான்​
வரலாற்று பதிவாக நீலத்தார் பொண்விழா மலரில் பறைந்து வைத்தோம்​
குச்சத்துக்குள் குறுகி நின்ற சைனிங்ஸ்சை பலருடன் பகிர்ந்தவன்​
சைனிங்ஸ் அன்றும் இன்றும் நாளையும் பெறும் வெற்றிகளுக்கு வித்தானவன்​
வாணிபடிப்பகத்தின் மேல் உள் அக்கறையில் அக்கறை கொண்டவர்​
சிதம்பராவின் கலைஅரங்கில் நீங்கள் நடித்த நாடகம்​
அவனுக்கென்ன தூங்கிவிட்டான் பலகாலம் ஊர்  மனதில் பதிந்தது.​
ஆயிரத்து நூறு மாவீருர்கள் விதையாகி வல்வைமண்ணின்​
ஒரு மாவீரன் தந்த மாதந்தை நீங்கள்​
வல்வையூர் கோயிலெல்லாம் பாடி திரிந்த மாபக்த்தன் நீங்கள்​
வாழ்நாள் சாதiனைகள் பெற்ற வல்வையின் வரலாறு நீங்கள்​
பிள்ளைச்செல்வங்களால் சிறப்பான  வாழ்வியிலில்​
எளிமை நேர்மை உண்மையுடன் வாழ்ந் வல்வையின்​
புனிதர்;களில் நீங்களும் ஒருவர்;​
நாலு பேர் மதிக்க வாழ்ந்தால் போது என்ற சமுதாயத்தில்​
ஊரின் நாலு தலைமுறை மதிக்க வாழ்ந்த உத்தமர் நீங்கள​
ஊரே இன்று கலங்கி நிற்பது நீங்கள் வாழ்ந்த வாழ்வு சரியானது.​
ஊரின் இளைய சமுதாயத்துக்கு அன்பான வேண்டுகோள்​
ஒரு வருடத்துக்குள் தங்கமண்ணா பெயரில் வல்வையம்பதியில்​
ஆயிரம் புனித விருட்ச்சங்களை நடுங்கள் வல்வையூர் புனிதம்பெறும்​
காலையும் மாலையும் சூரியஉதயம் அஸ்தமனம் கானும்  புனித ஊர்நாங்கள்​
 கடலோரம் தங்கமண்ணா நடப்போர் சங்கம் அமையுங்கள்​
வல்வையரின் வாழ்வியல் வெற்றிகளை அன்றே நிதர்சனம் செய்யுங்கள்​
கைலாசத்தில் கலந்து உறைந்த தங்கமண்ணாவை வணங்குகின்றோம்.​
   புலம்பெயர்ந்த குச்சம் காமாழை வாசிகள்​
   குச்சம் குட்டித்துரை​

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here