வல்வையின் மூத்த விளையாட்டு வீரா் முத்துக்குமாரு தங்கவேல் இறைவனடி சேர்ந்தார்
வல்வெட்டித்துறை நடராசா ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வல்வை விளையாட்டுக் கழகத்தின் நீண்டகாலத் தலைவருமான பெரியோர் முதல் சிறியோர் வரை தங்கப்பா என்று பாசமாக அழைக்கப்படும் அமரர் முத்துக்குமாரு தங்கவேல், அவர்கள் 10.04.2019 இன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
நீண்ட காலமாக வல்வை விளையாட்டுக்கழகத்தின் தலைவராக செயற்பட்ட தங்கப்பா, போர்ச்சூழ்நிலைகளின் போது இடம்பெயர்ந்து வன்னியில் இருந்த பொழுதுகளில் கழக வீரர்களை இணைத்து “வல்வை விளையாட்டுக்கழகம்” என்ற பெயரில் வழிநடாத்தி பல வெற்றிகளை குவித்து வல்வை வி.கவின் பெயரினை வன்னியெங்கும் ஒலிக்கச்செய்ததுடன், 2002 ஆண்டு ஏற்பட்ட சமாதானத்தின் போது மீண்டும் வல்வை மண்ணில் குடியேறி வல்வை விளையாட்டுக்கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று இன்று வல்வை விளையாட்டுக் கழகத்தின் பெயர் யாழ் மாவட்டம் எங்கும் தெரிகிறது என்றால் அதற்கு பின்னால் தங்கப்பாவின் கடின உழைப்பு இருக்கிறது என்றால் மிகையாகாது. வல்வை விளையாட்டுக் கழகத்தில் மாத்திரமில்லாதுஇ வல்வெட்டித்துறையின் பல தரப்பட்ட சழூகப்பணிகளில் தன்னை இணைத்து செயற்பட்ட ஓர் சழூக சேவையாளனை வல்வை மண் இன்று இழந்து தவிக்கின்றது.
அவரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்..
அன்னாரின் பிரிவால் வாடி நிற்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றோம்..









