வல்வை 21 நண்பர்கள் குழுமத்தினரால் தங்கபுரம், அளம்பில் எனும் முகவரியில் யுத்தத்தினால் தந்தையை இழந்த நிலையில் நான்கு (04) பிள்ளைகள் அவர்களின் சிறியதாயாரின் பராமரிப்பில் மிகுந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் வசித்து வருகின்றனர்.
அவர்களின் சிறியதாயாராகிய திருமதி. நந்தகுமார் லோகேஸ்வரி அவர்களின் குடும்ப நிலையினை கருத்திற்கொண்டு நிரந்தரத் தொழிலற்று இருக்கும் அந்த குடும்பத் தலைவரின் தொழில் முயற்சிக்காக ரூபா 25,000/= பெறுமதியான மீன்பிடி வலை மற்றும் பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று வருவதற்காக ஓர் துவிச்சக்கர வண்டியும் நேற்று வல்வை 21 நண்பர்கள் குழுமத்தினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பு : இக் குடும்பத்தின் பராமரிப்பிலேயே கண்பார்வையற்ற தாயார் மற்றும் சுகவீனமடைந்த தந்தையார் ஆகிய இரு முதியவர்களும் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் நண்பர்கள்.









