பருத்தித்துறை பிரதேச செயலக கடற்கரை கபடி வல்வை ஆண்கள், பெண்கள் அணியினர் இரண்டாமிடம் மற்றும் கடற்கரை கரப்பந்து ஆண்கள் அணி இரண்டாமிடம்…..
பருத்தித்துறை பிரதேச செயலக கடற்கரை கபடி சுற்றுப்போட்டியானது 26/02/2019 அன்று ரேவடி கடற்கரையில் இடம்பெற்றது.

அந்தவகையில் பெண்களுக்கான இறுதிப்போட்டியில் பருத்தித்துறை யுனைட்டட் பெண்கள் அணியுடனான இறுதிப்போட்டியில் பலமான போராட்டத்திற்கு மத்தியில் 7 புள்ளி வித்தியாசத்தில் தோல்வியை தழுவி வல்வை பெண்கள் அணியானது இரண்டாமிடத்தையும் அதேபோல வல்வை ஆண்கள் அணியும் யுனைட்டட் அணியுடனான இறுதியாட்டத்தில் தோல்வியைத் தழுவி இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர் .
மேலும் உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்ற ஆண்களுக்கான கரப்பந்தாட் இறுதிப்போட்டியிலும் வல்வை ஆண்கள் அணியானது இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள் வீர வீராங்கனைகளுக்கு









