இந்த ஆண்டு பெப்ரவரி 28ம் திகதி நிறைவு பெற்று புதிய வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் வரையில் புதிய நியமனங்கள் எவையும் வழங்க முடியாது என திறைசேரிப் பணிப்பாளர், நியமன அதிகாரிகளிற்கு எழுத்தில் அறிவித்துள்ளார்.
இலங்கையின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இதுவரை சம்ர்ப்பிக்கப்படாத நிலையில் மேலதிக செலவுகளிற்கான அனுமதி வழங்குவதில் உள்ள நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் புதிய நியமனங்கள் எவையும் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் வரையில் வழங்க முடியாது. 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாத்த்திற்கு முன்னர் இருந்த அரச பணியாளர்களிற்கான தொடர் சம்பளம் கணக்கறிக்கை மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே தற்போது புதிய நியமனம் எவையும் வழங்கினால் அவர்களிற்கான ஊதியம் வழங்குவதில் உள்ள சட்ட நெருக்கடியினைத் தவிர்க்கும் வகையில் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பித்து அனுமதிக்கப்படும் வரையில் புதிய நியமனம் எவையும் வழங்க முடியாது எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.







