யாழில் தமிழ் கட்சி தலைவர்களின் சந்திப்புஆரம்பம்! தமிழ் தேசிய மக்கள்முன்னணி, தமிழரசுக்கட்சி புறக்கணிப்பு!

0
383 views

தமிழ் கட்சி தலைவர்களின் சந்திப்புஆரம்பம்! தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக்கட்சி புறக்கணிப்பு!

13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் 2ம் திகதி நவம்பர் மாதம் காலை பத்து மணி தொடக்கம் யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் ஏற்கனவே தீர்மானிக்க பட்டதன் பிரகாரம் ஆரம்பமாகியது
இக்கூட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதிநிதி, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின்( புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா ஆகியோர் கலந்து கொண்டுள்ள போதிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் எவரும் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை ஊடகங்களுக்கும் கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here