போர்ப்ஸ் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியல்: நயன் சாதனை, விஜய்க்கு எத்தனையாவது இடம்?

0
576 views

2018ம் ஆண்டில் அதிகம் சம்பாதித்த பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரே தென்னிந்திய நடிகை நயன்தாரா தான்.

2018ம் ஆண்டில் அதிகம் சம்பாதித்த 100 பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலிடத்தில் உள்ளார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி இரண்டாவது இடைத்தை பிடித்துள்ளார்.

 

சல்மான்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரூ. 253.25 கோடி வருமானத்துடன் போர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்திலும், ரூ. 228.09 கோடி வருமானத்துடன் கோஹ்லி இரண்டாவது இடத்திலும், ரூ. 185 கோடியுடன் நடிகர் அக்ஷய் குமார் 3வது இடத்திலும் உள்ளார்கள்.

ப்ரியங்கா

சோப்ரா கடந்த ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த நடிகர் ஷாருக்கான் இந்த ஆண்டு ரூ. 56 கோடி வருவாயுடன் 13வது இடத்தில் உள்ளார். அதே போன்று கடந்த ஆண்டு 7வது இடத்தில் இருந்த நடிகை ப்ரியங்கா சோப்ரா ரூ. 18 கோடி வருமானத்துடன் 49வது இடத்தில் உள்ளார். அவரது வருமானம் ரூ,. 50 கோடி குறைந்துள்ளது.

தீபிகா

போர்ப்ஸ் பட்டியலில் நடிகை தீபிகா படுகோனே ரூ. 112.8 கோடி வருவாயுடன் 4வது இடத்தில் உள்ளார். 2012ம் ஆண்டில் இருந்து வெளியாகும் இந்த பட்டியலில் முதல் முறையாக ஒரு பெண் முதல் 5 இடங்களுக்குள் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா

ரூ. 15.17 கோடி வருவாயுடன் நயன்தாரா 69வது இடத்தை பிடித்துள்ளார். போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே தென்னிந்திய நடிகை நயன்தாரா தான். இந்த பட்டியலில் ஏ.ஆர். ரஹ்மான் ரூ. 66.75 கோடியுடன் 11வது இடத்திலும், ரூ. 50 கோடியுடன் ரஜினி 14வது இடத்திலும் உள்ளனர்.

விஜய்

ரூ. 30.33 கோடி வருவாயுடன் விஜய் 26வது இடத்திலும், ரூ. 26 கோடி வருவாயுடன் விக்ரம் 29வது இடத்திலும், ரூ. 23.67 கோடியுடன் சூர்யா 34வது இடத்திலும், ரூ. 23.67 கோடியுடன் விஜய் சேதுபதி 34வது இடத்திலும், ரூ. 17.25 கோடியுடன் தனுஷ் 53வது இடத்திலும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here