முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் ” தமிழ் மக்கள் கூட்டணி ” உதயமாகியது..
அதனுள் தமிழ்தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர முன்னணி(சுரேஸ் அணி), ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் போன்ற கட்சிகள் இணைந்து தமிழ்தேசிய மக்களின் நிலையான உரிமையினை நேரிய தமிழ்தேசிய அரசியலினூடாக பயணித்து பெற்றுத்தந்திட பணி செய்வீர்கள் என நம்புகிறோம்.
உங்கள் புதிய கூட்டணி, நிச்சயம் துரோக கும்பல்களின் கூடாரம் தமிழரசுக்கட்சியை புதைகுழியில் தள்ளும். அதை நிச்சயம் மக்கள் உங்கள் கூட்டணியினூடாக செய்து முடிப்பார்கள்.
“காலம் தரும் புதிய மாற்றம் உங்கள் கூட்டணி. நிச்சயம் வெற்றிபெறும் கூட்டணியாகி தமிழ்தேசிய மக்களின் விடியலுக்காக உழைப்போம், பாடுபடுவோம். நாம் எல்லோரும் ஒன்றாகி உங்களோடு இணைந்து பயணிக்கிறோம். உங்கள் வெற்றிக்காக பாடுபடுகிறோம். மாற்றத்தை உருவாக்குங்கள்.
“தமிழ்தேசம் பிறந்திட தமிழ் மக்கள் கூட்டணியோடு இறுக கரம் பிடிப்போம்.”








