இலங்கைக்கும் சீனாவிற்கு பண்டைய காலத்தில் தொடர்புகள் இருந்ததாக தெரிவித்து யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இலங்கை சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து அகழ்வு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சீனாவிற்கு யாழ்ப்பணத்திற்கும் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்புகள் இருந்திருக்கலாம் என தெரிவிக்கும் வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்கனவே 1980 ஆம் ஆண்டு சீன தொல்லியர் ஆய்வார் ஜோன் கச்சுவல் செய்த ஆய்வின்போதுஇ சில சீன நாட்டு நாணயம் மற்றும் சீனக் கப்பலின் சில பாகங்களும் அல்லைப்பிட்டி கப்பல் துறை பகுதியில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற போர் காரணமாக குறித்த ஆய்வுப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் தற்போது சீன அரசு உத்தியோக பூர்வமாக இலங்கை அரசிடம் எழுத்தில் விண்ணப்பித்து இலங்கை சீன அரசுகள் ஒப்பந்தம் மேற்கொண்டு அதன் அடிப்படையில் தற்போது சீன மற்றும் இலங்கை நாடுகளின் தொல் பொருள் திணைக்களங்கள் இணைந்து அல்லைப்பிட்டி கடற்பகுதியில் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.








