உடுவில் பிரதேச செயலக பிரிவு முடக்கம்

0
494 views

உடுவில் பிரதேச செயலக பிரிவு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ் மாவட்ட செயலாளர் திரு.க.மகேசன் அவர்கள் அறிவித்துள்ளார். உடுவில் பிரதேச செயலக பிரிவில் மருத்துவ, சுகாதார நடவடிக்கைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைகள் முடக்கப்படுகின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடுவில் பிரதேச செயலக பிரிவில் உள்ள 28 கிராமசேவகர் பிரிவுகளில் 26 பிரிவுகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதாரத் துறையினரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here