இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட வல்வைப் படுகொலையின் 29 ஆவது கண்ணீர் வணக்க நிகழ்வு இன்று வல்வெட்டித்துறை சந்தியில் அமைக்கப்பட்ட விசேட அரங்கில் இடம்பெற்றது.
1989 ஆம் ஆண்டு வல்வையில் வைத்து 63 பொதுமக்கள் இந்திய அமைதிப்படையால் படுகொலைசெய்யப்பட்டனர்.அதன் 29 ஆவது கண்ணீர் வணக்க நிகழ்வு இடம்பெற்றது
வல்வை மக்களும் ஜனநாயக போராளிகள் அமைப்பினரும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் பொதுச்சுடரினை படுகொலை செய்யப்பட்ட சீலனின் மைத்துனர் பிறேம்குமார் ஏற்றிவைக்க முன்மைச்சுடரினை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து வல்வை நகரசபையின் நகரபிதா எஸ்.கருணானந்தராசா மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் நகரசபை உறுப்பினர்கள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஜனநாயகக்கட்சியின் தலைவர் செயலாளர் உட்பட பலரும் சுடரேற்றி மலர் வணக்கத்தையும் செய்தனர்.

















