சம்பியனாகியது தீருவில் 35வயதுக்கு மேற்பட்ட உதைபந்தாட்ட அணி.

0
765 views

ரேவடி அணியுடனான இறுதியாட்டத்தில் 7:1 என்ற கோல்கணக்கில் கோல்மழை பொழிந்து சம்பியனாகியது தீருவில் வி.க..

மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்த அவரது குடும்பத்தினரின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் பெருவிளையாட்டு நிகழ்வுகளின் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட தொடரின் இறுதி ஆட்டம் நேற்று நிறைவு பெற்றது.
இறுதியாட்டத்தில் தீருவில் இரேவடி அணிகள் மோதின. தாஸ் அவர்களின் சிறப்பான ஆட்டத்துடனும் இரட்டைக் ஹட்ரிக் கோல்களுடனும் தீருவில் அணி 7:1என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது.


தீருவில் சார்பாக தாஸ் அவர்கள் 6 கோல்களை (தொடரில் 3போட்டியில் 10 கோல்கள்) போட்டு ஆட்டநாயகன் தொடராட்ட நாயகன் விருதினை வென்றார்.
வாழ்த்துக்கள் வல்வை தீருவில் விளையாட்டுக்கழக அணியினருக்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here