எதிர்காலத்தில் வடமராட்சி மக்களின் நிலை ?????

0
844 views

வடமாகாண சபை உறுப்பினரின் தந்தை மீது தாக்குதல்: நகைகளும் கொள்ளை! எதிர்காலத்தில் வடமராட்சி மக்களின் நிலை ?????

வடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனின் பெற்றோரின் வீட்டினுள் புகுந்த இனந்தெரியாதவர்கள் அவரது தந்தை மீது தாக்குதல் நடத்திவிட்டு நகைஇ பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

குடத்தனையில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டினுள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12 .30 மணியளவில் உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த மாகாண சபை உறுப்பினரின் தந்தையார் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னர் கொள்ளையில் ஈடுபட்டனர்.

தாயாரின் நகைகள் 6 பவுண் மற்றும் உண்டியலில் சேர்த்த சுமார் 40 ஆயிரம் பணம் என்பவற்றை அவர்கள் கொள்ளையடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது வீட்டினுள் சுமார் 45 நிமிடங்கள் கொள்ளையர்கள் தேடுதல் நடத்தியுள்ளதுடன், வீட்டில் இருந்த மூன்று கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் அடித்து நொருக்கி விட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here