வல்வெட்டித்துறையில் பெரும்பான்மை மக்கள் கேபிள் மூலமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து வருகின்றார்கள். சிலரே டிஸ்க் மூலம் பார்ப்பவர்கள்.
இரண்டு நிறுவனங்கள் வல்வைக்கு கேபிள் மூலம் நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. ஒரு நிறுவனத்தில் ஒளிபரப்பு போட்டிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே நின்றுவிட்டபடியால் ரசிகர்கள் இரண்டாவது நிறுவனத்தின் மூலம் ஒளிபரப்பாகும் நண்பர் உறவினர் வீடுகளுக்குச் சென்று இறுதிப்போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

பிரான்ஸ் நாடு முதல் கோல் அடித்த நிலையில் இரண்டாவது கேபிள் நிறுவனமும் ஒளிபரப்பை நிறுத்தி விட்டது. இதனால் உதைபந்தாட்ட ரசிகர்கள் நிறைந்த வல்வை நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரலையில் பார்க்க முடியவில்லையே என்ற சோகத்திலும் கோபத்திலும் வல்வை மக்கள்.










