20 வயது ஆண்களுக்கான எறிபந்தில் மீண்டும் சம்பியனாகியது யூனியன் கல்லூரி

0
800 views

வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட எறிபந்தாட்டத்தில் 20 வயது ஆண்களுக்கான எறிபந்தில் இவ்வருடம் மீண்டும் சம்பியனாகியது தெல்லிப்பளை யூனியன் கல்லூரி.


குறித்த போட்டியின் இறுதியாட்டங்கள் நேற்று கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இதில் 20 வயது ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியும் துணுக்காய் கோட்டைகட்டிய குளம் மகா வித்தியாலயமும் பலப்பரீட்சை நடத்தின.மூன்று செற்களைக்கொண்ட இச் சுற்றுப்போட்டியில் 25:17 26:24 என்ற புள்ளிகளைப் பெற்று 2:0 நேர் செற் கணக்கில் வென்று சம்பியனாகியது தெல்லிப்பளை யூனியன் கல்லூரி.
இதில் மூன்றாமிடத்தை நெல்லியடி மத்திய கல்லூரி அணி பெற்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here