உலகப்பூப்பந்தாட்டப் பேரவையும் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறையுடன் இணைந்து வடமாகாண பூப்பந்தாட்டச்சங்கம் நடத்தும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான பூப்பந்தாட்டப்போட்டி வெள்ளிக்கிழமை காலை 8 மணிமுதல் மன்னார் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளன.
இதில் நாளை மறுதினம் 12 வயது, 14 வயது மற்றும் 20 வயது ஆண் பெண்களுக்கான போட்டியும் சனிக்கிழமை 16 வயதுக்குட்பட்ட மற்றும் திறந்த வயதுப் பிரிவினருக்கானபோட்டியும் இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை 40 வயதுப் பிரிவினர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆட்டங்களும் இடம்பெறவுள்ளன.








