தங்கப்பதக்கம் பெற்ற வவுனியா மாணவன்

0
655 views

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் தடகள விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்றார் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த எஸ்.கிந்துசன்.
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடாத்தப்படும் மாகாண மட்ட விளையாட்டு விழாவின் தடகளப்போட்டிகள் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.

அதில் நேற்று இடம்பெற்ற ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டத்தில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.கிந்துசன் 34 நிமிடங்கள் 32.4 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப்பதக்கத்தையும் ,யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஜெயந்தன் 35 நிமிடங்கள் 51.9 செக்கன்களில் ஓடி முடித்து வெள்ளிப்பதக்கத்தையும் ,முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த
எஸ்.திபாகர் 35 நிமிடங்கள் 32.1 செக்கன்களில் ஓடி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here