வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை – குயில்வத்தை பகுதியில் வேன் ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து இன்று நண்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வட்டவளை போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா பகுதியிலிருந்து ஓமான் நாட்டு பிரஜைகளை ஏற்றி காலி பகுதியை நோக்கி பயணித்த குறித்த வேன் குயில்வத்தை பகுதியில் வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் வேன் வழுக்கி இழுத்தச்சென்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனத்தின் சாரதியும் வெளிநாட்டு பிரஜைகள் இருவரும் பயணித்துள்ளதாகவும் இதில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தோடு மலையகத்தில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றதனால் வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்படுவதனால் வாகனங்களை மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.








