மரண அறிவித்தல் சந்திரகுமார் தமயந்தி

0
1,000 views

மரண அறிவித்தல்

சந்திரகுமார் தமயந்தி

இதயத்தை உடைத்த

இளமை மரணம்

————————

வளர்ந்த முழுமதியாய்

வானம் போல்  எம்முள்

நிறைந்திருந்தாய்

தேய்பிறையாகி

இருளாய் தேய்தனை

மின்னல் வேகத்தில்

ஒற்றை நாள் நிலவின்

மறைவுபோல் சென்று 

மீண்டு வாராயோ…!

ஆயிரம் உறவுகள்
அறுதலுக்காக நின்றாலும்
வாழ் நாள் முழுவதும்
உன்னை தாங்கிக் பிடிக்க

உயிர்த்த உறவாய்

கரம் பிடித்தவள்-இன்று

மரித்து மறைந்து

போவதென்பது

இதயத்தை உடைத்த இளமை மரணம்..!

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட சந்திரகுமார் தமயந்தி Aug 04, 2022 அன்று நோர்வேயில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் சந்திரகுமார் ( சுந்து) அவர்களின் பிரியமான மனைவியும் மயூரன் , அரவிந்த் , தர்ஷிகா ஆகியோரின் பாசமிகு அன்னையும் பாலசுப்பிரமணியம் ( தம்பி அண்ணா) , கமலவேணி அம்மா ஆகியோரின் புதல்வியும் காலஞ்சென்ற சச்சிதானந்தவேல் ( சசிகலா ஸ்ரோர்ஸ்) , அருந்தவநாயகி ஆகியோரின் மருமகளுமாவார்.

இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் 

கிரியை:

08.08.2022 திங்கட்கிழமை காலை 10.00 முதல் 11.00 

Østre gravlund llille kapell, Tvetenveien 7,0661 Oslo

தகனம்:

08.08.2022 திங்கட்கிழமை காலை 11.45 முதல் 12.15 

Alfaset krematorium, Nedre Kalbakkvei 99, 1081 Oslo

தொடர்புகளுக்கு
நோர்வே : 011 472 274 5184
011 479 666 5730
கனடா :905 794 9068

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here