தமிழ் பேசும் எமதுயிர் உறவுகளே ஓர் நிமிடம்…….
தமிழ்ப் பெண்ணாக தேசிய அணியில் விளையாடுகின்றேன்! உறங்குவதற்கு கூட வீடு இல்லை கண்ணீர்மல்கும் கஜேந்தினி” . தமிழ்ப் பெண்ணாக தேசிய கபடி அணியில் இலங்கைக்காக தேசிய மட்டத்தில் விளையாடுகின்றேன்இ ஆனால் நான் எனது குடும்பம் சேர்ந்து உறங்குவதற்குக்கூட இன்று சாதாரண அப்படிடை வசதிகளுடன் கொண்ட ஒரு வீடு இல்லாது சொல்லொண்ணா நிலையில் வாழ்ந்து வருகின்றேன்” என ராசா கஜேந்தினி தெரிவித்தார்.
தேசிய அணிக் கனவு என்பது ஒவ்வொரு வீரர்களுக்கும் நிச்சயமாக இருக்கின்ற ஒன்றுதான். ஆனாலும் தேசிய அணிக்கு விளையாட தகுதி இருந்தும் பல காரணங்களால் பலருக்கு அது நிறைவேறாத கனவாகவே முடிந்து விடுகின்றமை துரதிஸ்ரவசமானது. அவ்வாறு தேசிய அணிக்கனவோடு பயணித்து இன்று அந்த இலட்சியத்தை அடைந்தும் கூட பணப்பற்றாக்குறைகாரணமாக எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கும் ஓர் சகோதரியின் நிலையினை சற்று சிந்தியுங்கள்…
இலங்கை வரலாற்றில் காலம் காலமாக தமிழர்களுக்கான சந்தர்ப்பம் என்பது அத்தி பூத்தலிலும் அரிதாகவே காணப்பட்டு வந்தது. ஆனால் சமீபகாலமாக இலங்கை விளையாட்டுத் துறையில் தமிழர்களுக்கான கதவு சற்று திறக்கப்பட்டுள்ளது. முதலில் உதைபந்தாட்டத்தில் பல தமிழரின் கனவுகள் நனவாகின. ஞானரூபன், கொட்வின், எடிசன் போன்றோர் தேசிய அணியில் இடம்பிடித்திருந்தமையும், மேலும் பல எம் சகோதரர்கள் தேசிய 16, 19, 20 மற்றும் 23 வயதுக்குற்பட்டவர்களுக்கான அணிகளில் தமது சர்வதேச அறிமுகங்களை மேற்கொண்டிருந்தமையும் யாவரும் அறிந்ததே. சமீபத்தில் சீனியர் மட்ட கிரிக்கட் போட்டிகளில் தமிழர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டார்கள். ரியூட்டர், சஞ்சீவன் மற்றும் கோபிநாத் ஆகியோர் கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்ற 25 வயதுக்குற்பட்டவர்களுக்கான கிரிக்கட் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இளையோருக்கான தேசிய கபடி அணியிலும் எம் சகோதரி ஒருவர் கால்பதித்துள்ளார். கடந்த வாரங்களில் இளையோர் கொண்ட கபடி அணிக்கு தேசிய ரீதியில் தமிழர் சார்பாக தமிழ் பேசும் பெண்ணாக தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு வீராங்கனை தான் மட்டக்களப்பு கிரான் கிழக்கு விஸ்ணு ஆலய வீதியிலுள்ள கஜேந்தினி.தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பெரும்பான்னை இன வீரர்களில் ஒருவளாக தனது தைரியத்தினாலும், முயற்சியினாலும் இன்று ஈராக் நாட்டில் விளையாடி இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்துள்ள இந்த இளஞ்சாதனையாளருக்கு பின் இருக்கும் சோகக்கதையை சற்று கேளுங்கள்..
ஓலைக் குடிசையில் அதுவும் பூரணப் படுத்தப்படாத குடிசையில் இருந்து கொண்டு தேசிய அணியில் விளையாடும் கஜேந்தினியின் வாழ்கையிலும் நாட்டில் நடந்த யுத்த கனங்கள் விட்டுவைக்கவில்லை. தனது பாசத்துக்குரிய அண்ணா விடுதலைப் போராட்டத்தின்போது இறுதி யுத்தத்தில் பறிகொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் “என்னுடைய அண்ணா இருந்திருந்தால் எங்கள் குடும்பத்தை இந்த நிலைக்கு வைத்திருக்க மாட்டார். ஏனையவர்களைப் போல் நாங்களும் ஓரளவு சந்தோசமாக இருந்திருப்போம்.
சிறு வயதிலே தனது தந்தை நோயினால் அவதியுற்று இறந்து விட்டார், இந்த குடிசையில் நான் உட்பட பதினொராம் தரம் படிக்கும் தம்பி, ஒன்பதாம் தரம் படிக்கும் தம்பி வயது போன எனது அம்மா, எனது அம்மம்மான அனைவரும் வாழ்ந்து வருகின்றோம்.படிப்பதும் இதில் தான் படுத்துறங்குவதும் இங்குதான், எனது உடை கூட மாற்ற முடியாத ஒரே ஒரு அறை கொண்ட சிறிய குடிசை. என்ன செய்வது எனது அன்பு அப்பா, அண்ணா இப்போது இருந்து இருந்தால் எப்படி இருக்காது” என தெரிவித்தார்
எனது முதலாவது விமானப் பயணம், நினைத்துக் கூடப் பார்க்கவில்லை, என்னுடன் பல தமிழ் பேசும் வீரர்கள் தெரிவுக்காக வந்தார்கள். அதில் நான் தெரிவு செய்யப்பட்டமை ஒவ்வொரு தமிழருக்கும் கிடைத்த எதிர்கால வெற்றியென நினைக்கின்றேன். மொழியாற்றல் இல்லை, சக வீரர்களுடன் நன்றாக விளையாட மட்டும் கிடைத்தது. எனக்கும் ஆசைதான் என்னுடன் தேசிய அணிக்காக விளையாடும் சக சிங்கள வீரர்களைப் போல் ஒரு சில வசதிகளை பெற்றுக்கொள்ள, என்ன செய்வது, போடுவதற்கு ஒழுங்கான உடை, மாற்றிப்போட சப்பாத்து போன்ற பல்வேறு குறைபாடுகளுடன் இருக்கின்றேன், பெருமூச்சு விட்டு இருப்பதைக் கொண்டு விளையாட வேண்டிய வறுமை நிலையில் தற்பொழுதுள்ளேன்.
நான் முழுக்க முழுக்க கிரான் ஐக்கிய விளையாட்டு கழத்திற்கு விளையாடி வருகின்றேன். பெரும்பான்மை இன வீரர்களின் கடும் சவாலுக்கு மத்தியில் நான் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டதும் எனது விளையாட்டு கழகம் மற்றும் ஊர் நலன் விரும்பிகள் சேர்ந்து எனக்கு போக்குவரத்து பணம் போன்றவற்றை சேர்த்து ஈரக்கில் நடைபெற்ற போட்டிக்கு வழியனுப்பி வைத்தார்கள் அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். புல் தரையிலும் மண் தரையிலும் கிராமத்தில் கபடி விளையாடி நான் இன்று தேசிய ரீதியில் காப்பட்டில் விளையாடுகின்றேன். எனது குடும்ப நிலை தொடர்பாக உங்களைப் போல நல்ல உள்ளம் கொண்ட அனைவருக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றேன். எனவே எமது தமிழ் தேசத்து உறவுகள் எனது குடும்ப நிலையினை அறிந்து எனக்கு உதவி செய்யுங்கள், நான் அதனை வரவேற்கின்றேன். என்றும் உங்களை மறக்கமாட்டடேன், எனது ஆசை என்னைப் போன்ற பல தமிழ் வீரர்களை எமது தமிழ் தேசத்தில் இருந்து தேசிய ரீதியாக கொண்டு செல்வது அதனை நான் என்னால் இயன்றவரை திறன்பட நிறைவேற்றுவேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சற்றுச் சிந்தித்துப் பாருங்கள் உறவுகளே….!
ஒரு வீரர் தேசிய அணியில் இடம்பிடிப்பது, அதுவும் ஓர் தமிழ் வீரர், நின்மதியாக தூங்க கூட முடியாத நிலையில் உள்ள ஓர் வீரர் தேசிய அணியில், அதுவும் இலங்கை நாட்டின் தேசிய அணியில் இடம் பெறுவதற்கு எந்தளவு திறமை வேண்டும்….?
எவ்வளவு சவால்கள், போட்டிகள், போராட்டங்கள், இழப்புகள், தட்டிகளிப்புகளளை கடந்து இன்று ஒர் நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்….?
புலம்பெயர்ந்து வாழும் உறவுகளை சற்று சிந்தியுங்கள். “எமது தமிழ் தேசத்து உறவுகள் எனது குடும்ப நிலையினை அறிந்து எனக்கு உதவி செய்யுங்கள்” என்று ஒர் பெண் வாய் விட்டு கேட்கிறார் என்றால் அவர் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தால் என்று சற்று சிந்தித்து பாருங்கள்…
இவர் ஒருவர் மட்டுமல்ல இவரை போல் இன்னும் பல்லாயிரம் “கஜேந்தினி”கள் தங்கள் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் எங்கள் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…
உங்களால் முடிந்த சிறு தொகையை அவர்களுக்கு வழங்குங்கள். இவ்வாறு இலட்சியங்களுடன் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் வழங்கும் பணம், உங்களுக்கு பணமாக தொன்றலாம். ஆனால் அவர்களுக்கோ அது நீங்கள் அவர்கள் திறமை மீது வைக்கும் நம்பிக்கை…
இது வரை காலமும் இருந்து வந்த “தமிழர்களுக்கு வாய்ப்புக்கள் தருவதில்லை” என்ற குற்றச்சாட்டு தற்போது மருவி வரும் நிலையில் இவர்களை போன்ற சாதனையாளர்களுக்கு நாங்கள் உதவவில்லை எனில், “தமிழர்கள் வாய்புக் கிடைக்காமல் தோற்றார்கள்” என்ற காலம் மாறி ” தமிழர்கள் தங்கள் பொருளாதாரத்துடன் போட்டியிட முடியாமல் தோற்றார்கள்” என்ற காலம் வருவதை தவிர்க்க முடியாது.
இப்படிப்பட்ட சாதனையாளர்களுக்கு உங்களால் முடிந்த ஒரு சிறு தொகையினை அன்பளிப்பு செய்வீர்ளானால் அவர்களின் வாழ்கையில் அது பெரு மாற்றத்தை கொண்டு வரும். கீழே அவரின் தொலைபேசி இலக்கம் மற்றும் வங்கி கணக்கு இலக்கம் போண்றன தரப்பட்டுள்ளன. உங்களால் முடிந்த சிறு தொகையினை அன்பளிப்பு செய்யுங்கள்.
இப்படிப்பட்ட சாதனையாளர்களுக்கு நீங்கள் அன்பளிப்பு செய்யும் ஒவ்வொரு ரூபாவிற்கு பின்னும் ஒவ்வொரு சாதனை படைக்கப்படும் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்.
தொடர்புகளுக்கு:
பெயர் : ராசா கஜேந்தினி:- 0756039044
வங்கி : மக்கள் வங்கி, கிளை கிரான்
கணக்கு இலக்கம் : 102-2-001-2-0020654