நாவலர் கலாச்சார மண்டபம் மத்திய அரசுக்கு கையளிக்கப்படாது என யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார் .
இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதுமேற்கண்டவாறு தெரிவித்தார். நாவலர் கலாச்சார மண்டபத்தினை இந்து கலாச்சார திணைக்களம் தமக்கு மீள வழங்குமாறு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
அத்தோடு இந்த விடயம் தொடர்பில் சமூக பெரியார்கள், ஆர்வலர்களும் கடிதங்கள் அனுப்பி வைத்துள்ளனர். இந்து கலாச்சார திணைக்களம் தமக்கு வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்படுகிறது
இந்த கோரிக்கை தொடர்பில் மாநகர சபை அமர்வில் கலந்து அமர்வின்போது விவாதித்துக் கொண்டோம்.மத்திய அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த திணைக்களத்திற்கு இதனை வழங்க முடியாது என்ற கருத்தினை முன்வைத்து இருந்தேன்
இது ஒரு மாநகரசபையிடம் இருக்கின்ற சொத்து அத்தோடு நாவலர் பிறந்து வளர்ந்த இடத்தில் உள்ள ஒரு சொத்து அவர் சைவம் என்பதற்கு அப்பால் தமிழ் மக்களுடைய மரபுரிமைச் சொத்து என்ற ரீதியில் இந்த விடயத்தினை மத்திய அரசாங்கத்தின் கீழ் வருகின்ற அந்த திணைக்களத்திற்கு கை அளிப்பதில்லை என தீர்மானித்து இருக்கின்றோம்
நாவலர் கலாசார மண்டபத்தினை மத்திய அரசாங்கத்துடன் கையளிக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுவோரிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு ஒரு சுமுகமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க உள்ளோம்
அத்தோடு ஏனைய அனைத்து கட்சிகளும் மாநகர சபைக்கு சொந்தமான ஒரு விடயத்தினை ஏன் மத்திய அரசிற்கு கையளிக்க வேண்டும் எனவும் கோரி இருக்கின்றார்கள் எனவே இதுதொடர்பில் பரிசீலிப்பது என தீர்மானித்துள்ளோம்.









