கொவிட் வைரசு தொற்றுக்கு உள்ளாகி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (24) காலை காலமானதைத் தொடர்ந்து உலகின் பலரும் அஞ்சலிகளைத் தெரிவித்து வருகின்றனர்.
திரு.மங்கள சமரவீர கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தனின் பாரியாரின் நெருங்கிய உறவினர் ஆவார். சிங்கள – தமிழ் கலப்புத் திருமணங்களுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வந்த ஒரு கால கட்டத்தில் மங்களவின் தந்தையின் சகோதரி மானெல் வல்வட்டித்துறை தமிழரான வழக்கறிஞர் உலகப் புகழ் சாதனை வீரன் ஆழிக்குமார் ஆனந்தனை மணம் புரிந்தார்.
வல்வெட்டித்துறையில் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை அமைப்பதற்கும் ஆர்வம் காட்டி செயற்படுத்தியும் இருந்தார் திரு.மங்கள சமரவீர.
குறிப்பாக நீச்சல் தடாகம் தற்பொழுது அமையப் பெற்றுள்ள முன்னர் இலங்கை சுங்கத் திணைக்களத்துக்கு சொந்தமான நிலத்தை வல்வை நகரசபைக்கு சொந்தமாக மாற்றுவதற்கு வல்வை மக்கள் மேற்கொண்ட முயற்சியை சாத்தியமாக்கியவர் திரு.மங்கள சமரவீர அவர்களே ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.











