60 வயதிற்கு மேற்பட்டோரே இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அதிகளவில் உயிரிழந்துள்ளனர் என்று, தொற்றுநோய் விஞ்ஞான பிரிவின் வைத்திய நிபுணர் சமிந்த கினிகே தெரிவித்துள்ளார்.
எனவே 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கட்டாயமாக தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அந்தவகையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களை கட்டாயமாக தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். கடந்த மாதம் பூராகவும் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சிலர் தடுப்பூசிகளை இதுவரையில் பெற்றுக்கொள்ளாமை தெரியவந்துள்ளது.







