குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசேட வேலைத்திட்டம்

0
649 views

கொரோனா பரவல் காணப்படும் காலப்பகுதியில் இலங்கையர்களுக்காக கடவுச்சீட்டு விநியோகிப்பதற்காக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் (பாஸ்போர்ட் அலுவலகம்) பிரதான காரியாலயம் மாத்தறை, வவுனியா, கண்டி மற்றும் குருணாகல் ஆகிய பிராந்திய அலுவலங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவானோருக்கு மாத்திரமே சேவைகள் வழங்கப்படும் என அத்திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய கட்டாய தேவை உள்ளவர்கள் தமது வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள காரியாலயத்தை கீழ்வரும் இலக்கங்கள் ஊடாக தொடர்புகொண்டு, நேரத்தை முன்பதிவு செய்துகொண்டதன் பின்னர் இலகுவில் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள தலைமை காரியாலயத்துடன் 070 -710 10 60 அல்லது 070 – 710 10 70 ஆகிய இலக்கங்களை தொடர்புகொண்டு காலை 9 மணிமுதல் பிற்பகல் ஒரு மணி வரையான கால எல்லைக்குள் நேரமொன்றை முன்பதிவுசெய்து கடவுச்சீட்டு பெறுவதற்கான விண்ணப்பத்தை வழங்கமுடியும்.

மாத்தறை பிராந்திய அலுவலகம் – 041 – 54 12 212 / 041 51 04 444
கண்டி பிராந்திய அலுவலகம் – 081 – 56 24 509 / 081 – 56 24 470
வவுனியா பிராந்திய அலுவலகம் – 025 – 56 76 344 / 025 – 56 76 345
குருணாகல் பிராந்திய அலுவலகம் – 037 – 55 50 562 / 037 – 55 50 563

மேற்படி அலுவலகங்களினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான தீர்மானமானது, அரசாங்கத்தினால் அமுலாக்கப்படும் நடமாட்டக் கட்டுப்பாடு, சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவின் தீர்மானங்களுக்கமைய மீள் திருத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here