கோவிட்19 தனிமைப்படுத்தல் ஊரடங்கைத் தொடர்ந்து இன்று இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பமாகின்றன. இதனையொட்டி சிதம்பராக்கல்லூரி அதிபர் வே.பரமேஸ்வரன் அவர்களின் கோரிக்கைக்கு இணங்க நகரசபையின் உதவியுடன் சிதம்பராக்கல்லூரி மைதானம் சிரமதான முறையில் சுத்திகரிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மைதானம் தொடர்ந்து பாவனையில் இல்லாததால் புற்களும், புதர்களும் வளர்ந்திருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.
இதற்கு முன்னதாக வல்வெட்டித்துறை நகரபிதாவால் முன்னெடுக்கபடும் மரநடுகை மற்றும் ஊர் வீதிகளை சுத்தப்படுத்தும் திட்டத்தில் 16/10 /21 அன்று சிதம்பரக்கல்லூரி வெளி வீதியில் அதிபர் வே.பரமேஸ்வரன் அவர்களால் நிழல் தரும் மரங்கள் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.











