தோற்றம் :12.04.1947 மறைவு: 20.06.2015
வடிவழகி திரு. வேலும்மயிலும் சரவணமுத்து (சித்திரம்)
(தெணியம்பை வல்வெட்டித்துறை)
இலங்கை யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் தற்போது திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு வேலும்மயிலும் சரவணமுத்து அவர்கள் 20.06.2015 (சனிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலங்சென்ற அம்பிகாவதியின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற வேலும்மயிலும் சிவகாமியம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பழனிவேல்-மீனாவதி தம்பதியரின் அன்பு மருமகனும் நவஜீவனின் அன்பு மாமனாரும், மதுரந்தி, மதுசிந்துஜா, மதுகீர்த்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும், நவீந்தின் அன்புத் தாத்தாவும் ஆவார். இவர் மாணிக்கரெத்தினம், நாகரெத்தினம், சவுந்திரராஜன், திவ்வியகுமாரி, செல்வராசா, சிறீராணி, இரத்தினசிங்கம், வசந்திகா, சிவசோதி, ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற யோகசுந்தரம், காலஞ்சென்ற யோகேந்திரன், இராஜேஸ்வரி, செல்லத்துறைசாமி, நந்தாவதி, ஆனந்தகுமாரன், சுகிர்தவதி, உருத்திரகுமாரன், மஞ்சுளாவதி ஆகியோரின் மைத்துனரும் ஆவர்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21.06.2015 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 4.30 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு ஓயாமாரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகிறோம்.
தகவல்: வே.சவுந்தரராஜன் ( தம்பி ) மற்றும் குடும்பத்தார்கள்.
விலாசம்: இல: 80, ரெங்காநகர், 2ம் மெயின் ரோடு, திருச்சி-21, இந்தியா.
00919940546805 : மகள் (திருச்சி)
00918098284999 : தம்பி (திருச்சி)
0016473453089 : மகள் (கனடா)