அனுமதிப்பத்திரமின்றி யாழ் குடாரப்பு கடற்பரப்பில் கடலட்டை தொழிலில் ஈடுபட்டிருந்த 29 வெளிமாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களமும் கடற்படையும் இணைந்து இன்று நடத்திய இந்த கைது நடவடிக்கையில் தொழிலுக்குப் பயன்படுத்தி 11 படகுகளும் அவற்றின் வெளியிணைப்பு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்கரையில் வைத்து மன்னார் மற்றும் கற்பிட்டி மீனவர்கள் 29 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் கடலட்டை பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என்று கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.










