31ம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவது தொடர்பான அறிவித்தல்

0
616 views

எதிர்வரும் 31 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு விதிமுறை மீண்டும் தளர்த்தப்படுமா என்பது குறித்து இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கொவிட் 19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டின் நிலைமை குறித்து ஆய்வு செய்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்படும் என்றும் இராணுவ தளபதி தெரிவித்தார் பெரும்பாலும், நாளை (28.05.2021) முடிவு செய்யப்படும் என்று சுகாதார வட்டாரங்கள் தெரிவித்தன.நாட்டில் கொவிட் பரவுவது குறைந்துவிட்டதா என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது, விரைவில் இதற்கான பதில் அறிக்கை மூலம் வெளியிடப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here