கொழும்பு துறைமுகத்தில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் முழுமையாக அழிந்தால் இலங்கையில் அமில மழை பெய்யும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கடல் கட்டமைப்பு உட்பட முழு சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கப்பலில் உள்ள இரசாயனங்கள் காரணமாக நீண்டகால பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என ஆணையத்தின் தலைவர் எஸ்.அமரசிங்க தெரிவித்துள்ளார். கப்பலுக்குள் நைட்ரிக் அசிட் 25 தொன் உள்ளதாகவும் அத்துடன் கப்பலின் 1,487 கொள்கலன்கள் உள்ள நிலையில் அவை 74,000 தொன் நிறைகளை கொண்டுள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்.









