கார் விபத்தில் வல்வெட்டித்துறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

0
1,410 views

யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற கார் விபத்தில் வடமராட்சி வல்வெட்டித்துறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் இருவரும் உயிரிழந்துள்ளனர். மூன்று தினங்களுக்கு முன்னர் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு குடும்பத்தினருடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது கார் மரத்துடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இச்சம்பவத்தில் வல்வெட்டித்துறை வேம்படியைச் சேர்ந்த மோகனதாஸ் திலீபன் [வயது 32 ] , அவரது தாயார் மோகனதாஸ் பிறேமாவதி [வயது 68 ] ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். இச் சம்பவம் வல்வையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here