இமையாணன் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

0
629 views

இமையாணன் மேற்கில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிற்கு நேற்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அண்மையில் உடுப்பிட்டி கோப்பு பகுதியில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டுவிழாவில் கொரோனா தொற்றாளர் ஒருவர் கலந்து கொண்டதை அடுத்து இமையாணன் மேற்கிலுள்ள சில பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதனை அடுத்து நேற்று அப்பகுதியைச் சேர்ந்த 55 பேருடன் சேர்த்து 60 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படும் வரை தனிமைப்படுத்தல் தொடரும் என சுகாதாரப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here