கிளிநொச்சி ஆனந்தநகர் பகுதியில் நேற்று ஏற்பட்ட அசம்பாவிதம்

0
504 views

கிளிநொச்சி – ஆனந்த நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு நேற்று இரவு 7.00 மணியளவில் தீ வைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் வாடகைக்கு குடியிருந்த நபருக்கும் கிராமத்தில் வேறு சிலருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் குடியிருப்பாளர் தாக்கப்பட்டுள்தாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை அவரை காணவில்லை தேடி வருவதாகவும் கிராமத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தீக்கிரையான வீடு அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here