நடைபெறவுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சையின் முடிவுகள் ஜுன் மாதம் வெளிவரும்

0
629 views

நடைபெறவுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சையின் முடிவுகள் ஜுன் மாதம் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் G.L.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகள் ஜுலை மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் குறித்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நிறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  அத்துடன், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் இரண்டினை அமைக்கும் திட்டம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாடாளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 513 பரீட்சை மத்திய நிலையங்களில் 6 இலட்சத்து 22 ஆயிரத்து 305 மாணவர்கள் கல்விப் பொதுதராதர சாதாரணதர பரீட்சையில் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுதராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்திகளின் அனுமதி அட்டையில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு விசேட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் G.L.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சார்திகளின் அனுமதி அட்டையில் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக அவற்றை மேற்கொள்ள முடியுமென கல்வி அமைச்சர் G.L.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here