வழமைக்குத் திரும்பவுள்ள வடமாகாண பாடசாலைகள்

0
633 views

வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் நாளை திங்கட்கிழமை முதல் வழமை போன்று இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். கொரோனா அச்சம் காரணமாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளும் யாழ்ப்பாணத்தில் காரைநகர் இந்துக் கல்லூரியும் மூடப்பட்டிருந்தன.எனினும் அப்பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எவருக்கும் கொரோனா தொற்றுக்கள் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதை அடுத்து பாடசாலைகள் எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here