வலி வடக்கு தையிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கடல் குளிக்கச் சென்ற போது அலைகளில் சிக்கி காணமற் போயுள்ளனர். வலிகாமம் வடக்கு பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தையிட்டியை சேர்ந்தவர்களாகும். குறித்த இளைஞர்கள் இருவரும் 19 வயதானவர்கள் என்பதுடன் ஒருவர் 10 நாட்களுக்கு முன்னரே திருமணம் செய்தவரும் ஆவர். அவர்களை தேடும் பணியில் அப்பகுதியைச் சேர்ந்த மக்களும் கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.












