யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியின் புதிய அதிபராக திரு. வேலுப்பிள்ளை புவனேந்திரராசா அவர்கள் இன்று பதவியேற்றார். கல்லூரியின் அதிபராக இருந்த சி.கிருஸ்ணகுமார் கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றதை அடுத்து வெற்றிடமாக இருந்த அதிபர் பதவிக்கு வடமாகாண கல்வி அமைச்சினால் உடுத்துறை மகா வித்தியாலய அதிபராக இருந்த திரு வே.புவனேந்திரராசா நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்றையதினம் அவர் கல்லூரியில் கடமைகளைப் பொறுப்பேற்றார். இந்த பதவியேற்பில் பிரதி அதிபர்களான த.விஜயகுமார், திருமதி கீ.கிரீதரன், பழையமாணவர் சங்கச் செயலாளர் கு.மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.










