தென்மராட்சி கடல் நீரேரி மக்கள் பகுதிகளுக்குள் உட்புகுந்துள்ளது

0
531 views

தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுத்துள்ளமையால் நீரேரியை அண்டிய பகுதிகளில் வசித்த மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

கடல் சில தினங்களாக ஊர்காவற்துறை , நாவாந்துறை , பூநகரி கடல் பெருக்கெடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது தென்மராட்சி கடல் நீரேரியும் பெருக்கெடுத்துள்ளது.

அதனால் கடல் நீரேரியை அண்டிய பகுதிகளில் தற்காலிக வீடுகளில் வசித்த குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி சன சமூக நிலைய கட்டடங்களில் தங்கியுள்ளனர்.

அதேவேளை , தென்மராட்சி, தனங்களப்பு பகுதியில் 20 வயற்காணிகளான சுமார் 6 ஏக்கர் வயற்காணிக்குள் கடல் நீர் உட்புகுந்துள்ளதனால் 6 ஏக்கர் நெற் செய்கை முற்றாக பாதிப்படைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here