தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணிடம் இலாவகமாகப் பேசி இரண்டு மோதிரம் மற்றும் இரண்டாயிரம் ரூபா பணம் என்பவற்றை அபகரித்துள்ளான் மீன் வியாபாரி.
இச்சம்பவம் நேற்று மதியம் கரணவாய் மத்தி சாளம்பன் பகுதியில் தனிமையில் வசித்து வந்த தங்கவேலாயுதம் சின்னத்தங்கம்(வயது74) என்பவர் வீட்டிலேயே இடம்பெற்றது.
நேற்று மதியம் குறித்த வீட்டிற்குச் சென்ற மீன் வியாபாரி குறித்த வயோதிப பெண்ணிடம் நீண்ட நேரம் கதைத்து விட்டு, ஏமாற்றி அவரின் 1.5 பவுண் நிறையுடைய 2 மோதிரத்தையும் 2ஆயிரம் ரூபா பணத்தையும் அபகரித்துக் கொண்டு தலைமைறைவாகி விட்டார்.
இது தொடர்பாக நெல்லியடி பொலிஸாருக்கு முறையிட்டதைத் தொடர்ந்து போலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.