தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு

0
542 views

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று காலை 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்றப் பிடியாணை உத்தரவிலேயே சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கும் பொலிஸார் அது தொடர்பான முழுமையான விபரத்தை வெளியிட மறுக்கின்றனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம் , இன்றைய தினம் காலை தனது வீட்டிற்கு வந்த பொரிஸார் காரணமின்றி தன்னை கைது செய்துள்ளதாகவும், இன்றைய தினம் கரும்புலி தினம் என்பதாலேயே தன்னைக் கைது செய்துள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கரும்புலி தினத்திற்குரிய ஏற்பாடுகளை தான் மேற்கொள்ளவில்லை எனவும் எனினும் வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் பருத்தித்துறை நீதவானின் இல்லத்தில் சற்று முன்னர் அவரை முன்னிலைப்படுத்திய போது பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லத்தில்,பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு கேக் வெட்டியது தொடர்பாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here