நகரப்பாடசலைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் சீரின்மை…….. மாணவர்கள பெற்றோர் விசனம்….

0
267 views

தொண்டாமனாறு பகுதியில் இருந்து நகரப்பாடசலைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கான சீரான போக்குவரத்து வசதிகள் செய்து செய்து தரப்படவில்லை என பெற்றோர்களும் மாணவர்களும் விசனம் தெரிவித்தள்ளனர்.தொண்டைமானாற்றிலிருந்து பருத்தித்திதுறை நகரப்பகுதியில் அமைந்துள்ள மெதடிஸ்த பெண்கள் உயர்தரப்பாடசாலை, காட்லிக்கல்லூரி, மற்றும் உடுப்பிட்டி அ.மி கல்லூரி, உடுப்பட்டி மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு நூற்றுக்கானக்கான மாணவர்கள் சென்று வருகின்றனர்.
அவர்களுக்கென தனியான போக்குவர்த்து வசதிகள் எவையும் செய்து கொடுக்கப்படவில்லை . தற்போது இவ்வீதிவழியாக போக்குவரத்தில் ஈடுபடும் பருத்தித்துறைச் சாலைக்குச் சொந்தமான பஸ்களில் பாடசாலைக்கு சென்று வருகின்றனர்.இப்பஸ் பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் பயணிகளுக்கே முன்னுரிமை கொடுப்பதனால் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கவேண்டிய நிலைகாணப்படுவதுடன் பாடசாலைகளுக்கு செல்லமுடியாத நிலையும் காணப்படுகின்றதுசிலவேளை ஒருவாறு கஸ்ரப்பட்டு பஸ்களில் ஏறினாலு; போதிய இடவசதியில்லாததால் மிதிபலககளில் நின்றவாறு பயணத்தை மேற்கொள்ளவேண்டிய நிலை காணப்படுகின்றது.
எனவே மாணவர்களின் பாதுகாப்பு கல்வி என்பவற்றைக் கருத்திற்கொண்டு மாணவரக்ளுக்கான பாடசாலை போக்குவரத்துச் சேவை சீராக இடம்பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here