பிரித்தானியாவுக்கான பயணப் பட்டியலில் ஸ்ரீலங்காவுக்கு இடம் இல்லை

0
750 views

பிரித்தானியாவில் கொரோனா வைரஸின் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் ஸ்ரீலங்காவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் என்பன நேற்று தனது நாட்டு பிரஜைகளுக்கான உலகளாவிய சுற்றுலா அறிவுறுத்தலை புதுப்பித்து வெளியிட்டன.

இதன்படி அவுஸ்திரேலியா, தென் கொரியா, மலேசியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகியவை பிரித்தானியர்களுக்கு பயணிக்கு பாதுகாப்பான நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எனினும் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள இலங்கையை தமது நாட்டவர்களுக்கு சுகாதார ரீதியாக பாதுகாப்பற்ற நாடாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

இதேவேளை அண்மையில் ஐக்கிய இராச்சியம் 50 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஜூலை 10 முதல் இங்கிலாந்துக்குச் செல்ல முடியும் என்று அறிவித்தது. அந்த நாடுகளின் பட்டியலிலும் ஸ்ரீலங்கா இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here