மே 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று வெளியிட்ட விசேட ஊடக அறிவித்தலில் இதனை தெரிவித்துள்ளது.
மேலும், ஜூன் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை நாடு முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்கும்.
அத்துடன், ஜூன் 4ஆம் திகதி மற்றும் 5 ஆம் திகதி ஆகிய இரு நாட்களிலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கும். ஜூன் 6ஆம் திகதி சனிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தொடர்ந்தும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.









