இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 55) நேற்று இரவு காலமானார்.
இவரின் மரணத்தை தலங்கம வைத்தியசாலை பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், புதிதாக நியமனம் பெற்ற இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடன், தோட்டத் துறையில் நடந்து கொண்டிருக்கும் இந்திய வீட்டமைப்புத் திட்டம் மற்றும் யாழ்ப்பாண கலாசார மையம் உள்ளிட்ட சமூக மேம்பாட்டுக்கான இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி கலந்துரையாடியிருந்தார்.








