யாழ் குடாநாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மதுபானக்கடைகளை மதுப்பிரியர்கள் முற்றுகை இட்டனர்.

0
780 views
யாழ் குடாநாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மதுபானவகைகளை கொள்வவு செய்வதற்கு மதுபானக.க்கடைகளை மதுப்பிரியர்கள் முற்றுகை இட்டனர்.
சர்வதேச ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரனோ வைரஸ்தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை அரசால் நாடுமுழுவதிலும் ஊரடங்குச்சட்டதௌதை நடைமுறைப்படுத்தியிருந்தது.
யாழ் மாவட்டம் தவிர்ந்த சிலமாவட்டஙௌகளில் இடைகௌகிடையே ஊரடங்குச்சட்டம் தர்த்தப்பட்டபோதும் கடந்த ஒருமாதகாலத்தின் பின் நேற்று யாழ் குடாநாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.இதனையடுத்து  மதுபான வகைகளை வாங்குவதற்கு யாழ் மாவட்டத்திலுள்ள மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்திருந்து முண்டிட்டடித்து வாங்கியதைக் காணக்கூடியதாக இருந்தது.
அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதனை விட மதுபாத்தை கொள்வனவு செய்வதிலேயே மதுப்பிரியர்கள் குறியயாக இருந்தனர். சில மதுபான விற்பனை நிலையங்களில் சமூக இடைவெளி பேணப்பட்ட போதும் சில இடங்களில் அதை மீறிச் செயற்பட்டதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here