கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பண்டாரவளை, தம்புள்ளை, வலஸ்முல்ல, சிவனொளிபாதமலை, ஹபுத்தளை, கட்டுநாயக்க, கருவலகஸ்வெவ, கேகாலை, சிலாபம் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.








