மட்டக்களப்பில் பாரதிராஜா, அமிரால் புகழப்பட்டு பரிசு பெற்ற வல்வை மாணவன் அரவிந்த்.

0
1,094 views

மட்டக்களப்பில் பாரதிராஜா, அமிரால் புகழப்பட்டு பரிசு பெற்ற வல்வை மாணவன் அரவிந்த்.

வல்வெட்டித்துறை  ரேவடி  ஒழுங்கையைச் சேர்ந்த திரு,திருமதி.சிவசாமி  சிதம்பரப்பிள்ளை -சரோஜினிதேவி தம்பதிகளின் மகள் வழி பேரன், திரு,திருமதி DR.சுகுமார் – நளினாராணி தம்பதிகளின் மகன் அரவிந்த் அவர்களே இயக்குனர் சிகரம் பாரதிராஜா, இயக்குனர் அமிரால் புகழப்பட்டு பரிசு பெற்ற வல்வை மாணவன் ஆவார்.

கடந்த 06.10.2019 அன்று மட்டக்களப்பில் லயன்ஸ் கழகம் மற்றும் அகிலன் பவண்டேசன்(லண்டன்) இணைந்து நடாத்திய 2019 சாதனையாளர் பாராட்டுவிழாவில் பொறியியல் துறையில் பல்கலைக்கழகத்தில் இடம்பிடித்த சுகுமார் அரவிநத்  பரிசு பெறுவதற்கு மேடைக்கு அழைக்கப்பட்டார்.  மேடை ஏறிய அரவிந்த் திரு.பாரதிராஜா அவர்களிடம் என்னுடைய இந்த முன்னேற்றத்திற்கு காரணம் எனது தாயாரே  எனவே அவரை மேடைக்கு அழைத்து அவரிடமே பரிசைக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த பாரதிராஜா அரவிந்தின் தாயார் நளினாராணி அவர்களையும் மேடைக்கு அழைத்து அவரிடமே பரிசிலை வழங்கினார்.

தொடர்ந்து இயக்குனர் அமிர் அவர்கள் உரையாற்றிய போது அரவிந்தின் தாயன்பையும், பக்தியையும் வெகுவாகப் பாராட்டி பேசினார்.

தொடர்ந்து இயக்குனர் சிகரம் பாரதிராஜா அவர்கள் உரையாற்றிய போது அரவிந்தை பாராட்டியதுடன்   மட்டக்களப்பு பேச்சு  வழக்கையும் அதன் அழகையும், விருந்தோம்பலையும்  வெகுவாக பாராட்டி பேசினார்.

மட்டக்களப்பு  St Micheals national College  உயர்கல்வியை கற்ற அரவிந்த் படிப்பில் 3A  எடுத்ததுடன் English Drama, Chess Champion School Prefect  போன்ற எல்லா தகமைகளும் பெற்றிருந்ததால் பாடசாலையிலும் இந்த வருடத்தின் சிறந்த மாணவனாக தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here