அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளப் போட்டிகள் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.
இதில் நேற்று இடம்பெற்ற 20 வயதுப் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றிய சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவி நே.டக்சிதா 3.35 மீற்றர் உயரத்தை தாண்டி தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த ஏ.அனிதாவால் ஏற்படுத்தப்பட்ட சாதனையை முறியடித்து புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதங்கத்தைப் பெற்றார். அனிதா 2014 ஆண்டு 3.23 மீற்றர் உயரமே இதுவரையும் சாதனையாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் இரண்டாமிடத்தை அதே கல்லூரியைச் சேர்ந்த வி.விசோபீகா 3.10 மீற்றர் உயரம் வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.
20 வயது ஆண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் புதிய சாதனையை நிலைநாட்டி தங்கம் வென்றார் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் ஏ.புவிதரன். 2016 ஆண்டு அருணோதயாக் கல்லூரி மாணவன் கே.நெப்தலி ஜோய்சனால் 4.61 மீற்றர் பாய்ந்து ஏற்படுத்தப்பட்ட சாதனையை 4.82 மீற்றர் பாய்ந்து புதிய சாதனையை நிலைநாட்டினார் சாவச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் ஏ.புவிதரன். மகாஜனாக்கல்லூரியைச் சேர்ந்த எஸ்.சுகிகேதரன் 4.40மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் மானிப்பாய் இந்துக்கல்லூரி மாணவன் எஸ்.கபில்க்ஷன் 4.20 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப்பக்கத்தையும் பெற்றனர்.








